பெண் வேடம் தரித்தவர் கைது

பெண்ணைப் போல் வேடமணிந்து, ஓட்டோவொன்றைச் செலுத்திச் சென்ற நபரொருவர் அக்மீமன- குருந்துவத்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரென்றும், இவர் அழகுக்கலை நிலைமொன்றுக்குச் சென்று, தன்னைப் பெண்ணைப்போல் அலங்கரித்துக்கொண்டு, வெலிகமையிலிருந்து அக்மீமன பிரதேசத்துக்குச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் குருந்துவத்தை பிரதேசத்துக்கு வருகைத் தந்து, முகவரி ஒன்று தொடர்பில் கேட்டபோது, அவர் தலையில் வைத்திருந்த போலி முடி காற்றில் பறந்துள்ளது.

இதனையடுத்து, இவர் மீது சந்தேகம் கொண்ட பிரதேசவாசிகள்  சந்தேகநபரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, பெண்ணொருவரைச் சந்திப்பதற்காகவே  பெண் வேடமணிந்து வந்ததாக, சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக, அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்