பிள்ளையானை சந்தித்த வரதர்

முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சா் வரதராஜ பெருமாள் முன் னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை சிறையில் சந்தித்து பேசியுள்ளார்

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகள் சேர்ந்து எவ்வாறு அரசியலை முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அவரது கட்சி அறிவித்துள்ளது.

இச் சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டதாகவும் தெரியவருகின்றது.

முன்னாள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைதாகிய பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே அக் கொலை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்