சந்துருக்கொண்டான் படுகொலை நினைவுக்கு29 ஆண்டு!!

சிங்கள. பேரினவாதிகளின் தமிழர்கள் மீதான அடக்கு முறையை நீக்கிட வேண்டுமென தமிழர்களுக்கான சுயநிர்ணயம் வேண்டுமென போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகளை இலங்கை அரசு அழித்தொழிக்க முனைந்த வேளை அப்பாவி தமிழ் மக்களை அழித்தொழித்த வரலாற்று படுகொலைகளே அதிகம்…

சிங்கள பேரினவாதிகளின் பார்வையில் தமிழ் மக்களும் விடுதலைப் புலி வீரர்களும் பயங்கரவாதி எனும் ஒரே பார்வையைக் கொண்டதே
அந்த ஒரே பார்வையே பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் மாவீரர்களையும் நாம் இன்று இழந்து நிற்க காரணம்…

விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் உண்மையான நிலைகளை பெரும்பாலான. சிங்கள மக்கள் அறிந்திருக்கவில்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை அதற்கான பிழையான வழிகளை கையாண்டது சிங்கள பேரினவாதம் என்பதும் போர் முடிவுக்கும் பின்னரான காலம் உரைத்து நிற்கிறது ….

இவ்வாறான நிலையில் தான் 1990 ம் ஆண்டு புரட்டாதி 9ஆம் திகதி கிழக்கை உலுக்கிய படுகொலை ஒன்று வந்தாறுமூலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெயர்ந்து இருந்த தமிழர்களில் 158பேர் விசாரணை எனும் போர்வையில் கொண்டு போய் தங்களின் வன்மங்களை தீர்த்து கண்ட மேனிக்கு படுகொலை செய்து இன்பம் கண்டார்கள்…

158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள் பின் மீண்டுமொரு திட்டமிட்ட இனவழிப்பை இலங்கை அரசு நடத்தியது அடுத்த இனப்படுகொலை கிழக்கு முழுவதும் உலுக்கியது அந்த படுகொலையே மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசத்தை அண்டிய ஊறனி. பிள்ளையாரடி.பனிச்சையடி முதலிய கிராமங்களில் இருந்த மக்களை…

இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியதை அடுத்து இராணுவத்தின் கட்டளைக் பணியாது செயற்பாடுவது தவறென கருதிய மக்கள் இராணுவமுகாமிற்குச் சென்றிருந்தார்கள்….

வயது முதிர்ந்தவர்களை லொறிகளில் ஏற்றிச்செல்ல ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருத்தப்பட்ட நிலையில் ஏழு மணியளவில் அங்கிருந்தவர்களை விசாரிக்கத் தொடங்கிய சிங்கள இராணுவம் எந்தொவொரு மானிதாபிமானத்தையும் பார்க்காது வாளினால் வெட்டி .கத்தியினால் குத்தி. துப்பாக்கியினால் சுட்ட இராணுவனும் ஊர்காவல்படையும்….

கிடங்கொன்றில் ரயரை எரித்து அதில் அப்பாவித் தமிழ் மக்களான குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எவரும் வேறுபாடு பார்க்காது எரிக்கப்பட்டனர்கள் இந்த கொடூரமான படுகொலை க்கு பின் பிரதேசமே ஓலத்தால் நிரம்பியது இந்த படுகொலையின் போது சிறுவர்கள் 47 குழந்தைகள். 85 பெண்கள். 28 முதியவர்கள் அடங்களாக 184பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்….

இந்த சந்துருக்கொண்டான் படுகொலையில் கிருஷ்ணகுமார் எனும் ஒருவரே அதிஸ்டவசமாக படுகாயங்களுடன் தப்பித்துக்கொள் முடிந்தது அவரையும் மட்டக்களப்பு வைத்திய சாலையில் வைத்து கடத்த இராணுவம் முனைந்ததாகவும் சொல்லப்படுகிறது …

இப்படி ஒவ்வொரு மாதமும் நினைவு கூறும் நிலையிலே சிங்கள பேரினவாதிகளின் தமிழர்கள் மீதான இனச்சுத்திகரிப்புக்கான படுகொலைகள் எண்ணிலடங்காது நடந்தெறியது கடைசியாக முள்ளிவாய்க்கால் வரை தமிழர்களை சிங்கள பேரினவாதிகள் திட்டம் போட்டு கொன்றொழித்தார்கள் ….

இவ்வாறு மனிதகுல விழுமியங்களுக்கு அற்பால் செய்யற்பட்ட பலருக்கு எதிராக விசாரணைகள் நடந்த போதும் சிங்கள பேரினவாதிகள் யாருக்கும் இவ்வாறான படுகொலைகளின் பின்புலத்தில் தண்டனைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை போதாக்குறைக்கு ஐ. நா.சபை வரை தமிழர்கள் மீதான இனவழிப்புக்கு சாட்சி இருந்தும் எந்த பயனுமில்லை இன்னுயிரை ஈகை செய்தவர்களை நினைவு கூறும் தினங்கள் மட்டுமே மிதமாக எஞ்சியுள்ளது வேதனையே, ,,,,


Recommended For You

About the Author: Editor