மாணவனை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்!

இறக்காமம் தனியார் வகுப்பில் கணித ஆசிரியர் மாணவனை மிருகத்தனமாக தாக்கியதால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறக்காமம் மூன்றாம் பிரிவில் அமையப் பெற்ற தனியார் வகுப்பு ஒன்றில் இரவு நேர கணிதப் பாட ஆசிரியர் பாட நேரத்தில் கணிதப் பாடம் விளங்கவில்லை என கூறியதற்காக மாணவனை மிருகத்தனமாக தாக்கியுள்ளார.

இந்நிலையில் குறித்த மாணவன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்று கொடுக்கின்ற போதும் பாடம் தொடர்பாக பகுதிநேர வகுப்புகளுக்குச் சென்று பணம்கொடுத்து மாணவர்கள் மேலதிக வகுப்புக்களில் கல்வி கற்று வருகின்றனர் .

அந்தவகையில் குறித்த ஆசிரியர் பணத்தை பெற்றுக்கொண்டு மாணவனுக்கு கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளார்

இது தொடர்பாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் ஆசிரியர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாடசாலையில் கற்றுக் கொடுக்கின்ற பாடங்களை சில ஆசிரியர்கள் பணத்துக்காக பகுதி நேர வகுப்புகளிலும் இரவு நேரங்களிலும் மாணவர்களிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு கல்வி கற்றுக் கொடுப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor