17 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி!

ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும், மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகின்ற நிலையில், வேட்பாளர்கள் குறித்து மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 14 அரசியல் கட்சிகள் எழுத்து மூலமாகவும், இரண்டு அரசியல் காட்சிகள் வாய்மொழி மூலமாகவும், சுயாதீனமாக ஒருவரும் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்துள்ளதன் பின்னணியில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலும், ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் ,வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor