லண்டனில் பேருந்தில் பெண்களுக்கு நடந்த கொடுமை!!

உருகுவே நாட்டைச் சேர்ந்த மெலினா தன் தோழி கிறிஸுடன் லண்டனைச் சுற்றி வந்துள்ளார்.

இரவில் இவர்கள் இருவரும் பேருந்தில் பயணித்துள்ளனர்.

நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் ஒன்று இவர்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியாகத் தாக்கிப் பேசியுள்ளனர்.

இருவரையும் கடுமையாகத் தாக்கிய அந்தக்கும்பல் அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

மெலினா தனது முகநூல் பக்கத்தில் ரத்தக் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. `நானும் கிறிஸும் இரவில் பேருந்தில் சென்றோம். அந்த 4 பேரும் குண்டர்களைப் போல செயல்பட்டனர். அவர்களை முத்தமிடச்சொல்லி எங்களை வற்புறுத்தினர். அவர்கள் எங்கள் இருவரையும் ஓரினச்சேர்க்கையாளர் என்று அழைத்தனர்.

எங்களை ஆபாசமாக சித்திரித்துப் பேசினர். அவர்கள் பேசியதை இங்கே என்னால் கூறமுடியாது. என்னால் அங்கு நடந்தவற்றை முழுமையாக விவரிக்க இயலவில்லை. கிறிஸ் உடல்நலம் குன்றியிருந்தார். ஆனாலும், அவரைத் தொடர்ந்து அந்தக்கும்பல் சீண்டியது. சில சில்லறைகளை எங்கள் மீது வீசினர். பேருந்தின் நடுவில் கிறிஸ் அவருடன் சண்டையிட்டுக்கொண்டு இருந்தார். மூன்று பேர் அவரைத் தாக்கினர். இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அடுத்ததாக நானும் தாக்குதலுக்கு உள்ளானேன். இந்தத் தாக்குதலால் எங்கள் முகங்களில் இருந்து ரத்தம் கொட்டியது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் சுயநினைவை இழந்ததாக உணர்ந்தேன். காவலர்கள் இருப்பார்கள் என்று பேருந்தின் மேற்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தோம். திடீரென பேருந்து நின்றது. எங்களிடம் இருந்தவற்றை அந்தக்கும்பல் எடுத்துச் சென்றுவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார். அவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்புகொண்டவர்கள் என்றும் தம்பதி என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளவர்கள், லண்டன் நகரம் இரவில் கொடூரமானதாக இருக்கிறது. பெண்களும், ஓரினச்சேர்க்கையாளர்கள் கும்பலான ஆண்களினால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor