வீட்டுத்திட்டத்தை கையளித்தார் சஜித்!

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பப்பட்ட மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஐித் பிரேமதாசவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் சஐித் பிரேமதாசாவினால் யாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டம் நாடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் 274ஆவது திட்டமாக யாழ். ஊரெழுப் பகுதியில் மாதிரிக் கிராம வீடுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட 19 வீடுகளையும் கையளிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதன்போது வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் சஐித் பிரேமதாச, வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இதன்போது அங்கிருந்தவர்களுக்கு வீட்டு உபகரணங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்வி இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Recommended For You

About the Author: Editor