பொன்சேகா சஜித்திற்கு எதிராக போர்க் கொடி!!.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என எந்த வகையிலும் வாக்குறுதி வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போர் கொடி உயர்த்தியுள்ளமை கட்சி உறுப்பினர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

தான்தோன்றித்தமாக ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் கட்சியை பயன்படுத்த கிடைக்காது.

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற நிலைப்பாட்டில் இருந்தே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகிறது.

சஜித் பிரேதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்று எந்த வகையிலும் உறுதியளிக்கப்படவில்லை. அப்படியான உறுதிமொழிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அப்படியானால், ஐக்கிய தேசியக் கட்சி தவிர்த்து விட்டு வேறு வழியில் போட்டியிட நேரிடும்.

காலை பின்நோக்கி வைக்க முடியவில்லை என்றால் இருக்கும் இடத்திலேயே இருக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor