இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது! ஈரான் ஆதரவு குழு

எல்லையைத் தாண்டி வந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை தெற்கு லெபனான் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக லெபனானின் ஈரான் ஆதரவு குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, குறித்த ஆளில்லா விமானம் இப்போது ஹெஸ்பொல்லா போராளிகளின் கைகளில் உள்ளது என தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் தமது ஆளில்லா விமானம் ஒன்று வழக்கமான நடவடிக்கைகளின் போது தெற்கு லெபனானுக்குள் விழுந்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் குறித்த ஆளில்லா விமான விபத்துக்கு காரணம் என்னவென அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹெஸ்பொல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் வான்வெளியில் நுழைகின்ற இஸ்ரேலிய ஆளில்லா விமானங்களை தமது குழு குறிவைக்கும் என்றும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor