“கமல், கஸ்தூரி செய்தால் சரி.. நான் செய்தால்மட்டும் தப்பா?”

பிக் பாஸில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல் குரல் கொடுக்க வேண்டும் எனவும், தன்னை கொடுமைப்படுத்தியவர்கள் முகமூடி கிழிய வேண்டும் எனவும் நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலமான போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் நடிகை மதுமிதா. டைட்டிலை வெல்வதற்கு அவருக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது எனக் கருதப்பட்ட நிலையில், திடீரென கையை அறுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.

அதன் தொடர்ச்சியாக மதுமிதா மீது விஜய் டிவி புகார் அளித்தது, பின்னர் மதுமிதா பதில் புகார் அளித்தது என பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றது. ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை மட்டும் யாரும் சொல்லவில்லை.

அரசியல் ஆகுமா? செய்தியாளர் சந்திப்பு இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து சம்பவத்தன்று பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றி மனம் திறந்துள்ளார் மதுமிதா. அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நடைபெற்ற அநீதிகள் குறித்து அவர் விளக்கமாகப் பேசியுள்ளார்.

காவிரி நீர் “சுதந்திர தினத்தன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள். எப்போதுமே மழை வேண்டி பூஜைகள் செய்வது, மந்திரங்கள் சொல்வது என் வழக்கம்.

அன்றும் அப்படித்தான் அந்த டாஸ்க்கில் நான் ஒரு கவிதை சொன்னேன். மதுவின் கவிதை வருணபகவான் கூட கர்நாடகாக்காரரா.. மழையாகக்கூட நம்மூர் பக்கம் வர மாட்டேன் என்கிறாரே என நான் கவிதை வாசித்ததும், ஷெரீன் உள்ளிட்டோர் எனக்கு எதிராகப் பேசினார்கள்.

அப்போது எனக்கு ஆதரவாக சேரனும், கஸ்தூரியும் தான் பேசினார்கள். சுதந்திர தினத்தில் எனக்கு என் கருத்துக்களைப் பேச உரிமை உள்ளது என கஸ்தூரி வாதிட்டார். அல்வா மாதிரி ஆகிவிட்டது ஆனால், உடன் இருந்த மற்ற போட்டியாளர்கள் குழுவாக எனக்கு தொந்தரவு கொடுத்தனர்.

கமல் கண்காணிக்க வேண்டும் பிக் பாஸும் இங்கு அரசியல் பேசக்கூடாது என கறாராகக் கூறி விட்டார். இது அவர்களுக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி ஆகிவிட்டது. எனவே தான் நான் கத்தியால் கையைக் கீறிக் கொண்டேன்.

அரசியல் ஆகுமா? தண்ணீர் பிரச்சினையைப் பேசியது எப்படி அரசியலாகும். அப்படியென்றால் பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி அரசியல் பேசினார், கமல் சார் வாராவாரம் அரசியல் பேசுகிறார். அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுப்பாடு இல்லையென்றால் எனக்கு மட்டும் ஏன்?

கமல் கண்காணிக்க வேண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல் குரல் கொடுக்க வேண்டும். ஓரு மணி நேரம் எபிசோட்டில் 40 நிமிடங்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் காட்டப்படுகிறது. அந்த 40 நிமிட எபிசோடை மட்டும் பார்த்து விட்டு பேசாமல் வீட்டில் 24-மணி நேரமும் என்ன நடக்கிறது என்பதை கமல் கண்காணிக்க வேண்டும்.

பொறுப்பை உணர வேண்டும் பொறுப்பை உணர வேண்டும் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், மக்கள் பிரதிநிதியாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராகவும் மக்கள் பார்க்கிறார்கள்.

அந்த பொறுப்புடன் அவர் நடந்து கொள்ளவேண்டும்” என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor