இன்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று முற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்காக 15 மில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் அஞ்சல் மூல விண்ணப்பங்களை மாவட்ட செயலாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor