ஆஸ்திரேலியாவிணை நாசப்படுத்திவரும் காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதிகளை நான்காவது நாளாக காட்டுத் தீ நாசப்படுத்தி வருகிறது.

Binna-Burra பகுதியில் கட்டுக்கடங்காமல் பற்றியெரியும் காட்டுத் தீ, நும்பினா பள்ளத்தாக்கை நோக்கிப் பரவி வருகிறது.

தீயணைப்பின்போது காயமடைந்த 66 வயது தீயணைப்பாளரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து, நியூ சவுத் வேல்ஸ் வட்டாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பற்றியெரியும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.

கடுமையான அந்தத் தீயில் பெரும்பாலான பகுதிகளும், 20 வீடுகளும் நாசமாகின.
அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor