புகையிரத விபத்தில் முதியவர் பலி.

யாழ். சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கொழும்பை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்