அசூரன் ட்ரெய்லர் வெளிவந்தது

‘வட சென்னை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனத்துடன் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் மிரட்டுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘அசுரன்’.

பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, நடிகர் கருணாஸின் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி திரைக்கு வருகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்