யாழ் மாநகர சபையில் அலட்சியப்போக்கை பட்டியல் இட்ட வரதராஜன்

1. பிராதன வீதியில் காணப்பட்ட பழக் கடை அகற்றல் தொடர்பானது…
யாழ்.பிரதான் வீதியில் பஸ்ரியன் சந்திக்கு அருகாமையில் உள்ள பழக்கடை தொடர்பில் அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்து அதனை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் உறுப்பினர் மயூரன் மற்றும் செஜயசீலன் ஆகியோர் அக் பழக்கடைக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன்

யாழ்.மாநகர சபையின் அனுமதி பெறாத அக் கடையை அகற்றுவது தொடர்பாக யாழ்.மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதன் யாழ்.மாநகர சபையினர் அக் கடையினை அகற்றும் முகமாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட அக் கடையில் இருந்த பழங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அக் கடை திறக்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகின்றது.
ஒரு கடையின் வியாபார பொருளாகிய பழங்கள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் குறித்த வியாபாரி எவ்வளவு பெரிய நடத்தினை அடைவான். அவன் தனது பொருட்களைப் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு யாழ்.மாநகர சபைக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு நடக்காமல் அடுத்த நாளே அதே இடத்தில் புது பழங்களைக் கொண்டு அக் கடை திறக்கப்பட்டு இன்று வரை நடை பெறுகின்றது என்றால் அப் பழக்கடையின் பின்னால் உள்ள சுட்சமம் என்ன?
ஒரு தடைவ பழங்கள் பறிக்கப்பட்டவுடன் யாழ்மாநகர சபையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆக மக்கள் விரும்பதா சட்டத்திற்கு புரம்பான ஒரு பழக்கடையை கூட அகற்ற எம்மால் முடியவில்லை?
2. கழிவு நீர் வீதியில் திறந்து விடுதல் தொடர்பானது..
.
ஐந்து சந்தியில் உள்ள ஒரு குடி நீர் விற்பனை நிலையம். அதன் பெயர்..
அங்கு தினமும் பல ஆயிரம் லீற்றர் நீர் எடுக்கப்படுகின்றது. நிலத்தடி நீர் தொடர்பான இவ் பாரதூரமான பிரச்சனை யாழ்.மாநகர சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்ற காரணத்தினால் அதை விடுத்து யாழ்.மாநகர சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரச்சனைக்கு செல்வோம்.
குடி நீர் விநியோகம் செய்கின்ற குறித்த நிறுவனம் யாழ்.மாநகர சபையில் எந்த வியாபர அனுமதியும் பெறவில்லை அத்துடன் குடி நீரில் இருந்து பிரித்தொடுக்கப்படுகின்ற கழிவு நீர் பல குடிமனைகள் மிக நெருக்கமாக உள்ள வீதியில் தினமும் திறந்து விடப்படுகின்றது. அதனால் குறித்த பகுதி வெள்ளம் நிறைந்தாக காணப்படுகின்றது.
இச் சம்பவம் அறிந்து நானும் சக உறுப்பினர் தனுஜனும் அப் பகுதி பி.எச்.ஐ அதிகாரியுடன் சென்றோம் அப்போது கடை உரிமையாளருடன் கதைத்த பி.எச்.ஐ அதிகாரி எனிமேல் கழிவு நீர் வெளியில் விட மாட்டாகள் என்ற உறுதி மொழியை எமக்கு தந்தார் அடுத்த சில நாட்களின் நடைபெற சுகாதார குழுக் கூட்டத்திலும் மேற்படி பி.எச்.ஐ அதிகாரியை வினாவிய போது அது நிறுத்தப்பட்டு விட்டது என்று கூறினார். ஆனால் அது இன்று வரை தொடர்கின்றது. குறித்த வியாபார நிலையத்தின் கழிவுநீர் வீதிகளில் திறந்து விடப்படுகின்றுது. இது யாழ்.மாநகர சபையின் அலட்சியப்போக்கினையே காட்டுகின்றது.
3. கஸ்தூரியார் வீதி வெள்ளவாய்க்காலுக்குள் அசிட் திரவத்தை சேர்த்தல் தொடர்பானது
மே மாதம் 12 ஆம் திகதி யாழ்.மாநகர சபை ஊழியர்கள் கஸ்தூரியா வீதியில் உள்ள ஒரு வெள்ளவாய்க்காலுக்குள் இறங்கி சுத்தம் செய்தார்கள். அந்த வெள்ளவாய்க்காலுக்குள் அயலில் நகை சுத்தம் செய்யும் இடத்தில் இருந்து 68 வீத செறிவுள்ள அசிட் திரவம் விடப்படுகின்றது. அந்த அசிட் கலந்த வெள்ளவாய்க்காலுக்கு எந்த வித பாதுகாப்பும் இன்றி இறங்கி தான் எமது மாநகர சபை ஊழியர்கள் அதனை சுத்தம் செய்தார்கள். இது தொடர்பில் வட்டார உறுப்பினர் அருள் குமரன் அவர்கள் அறிவித்தன் படி உறுப்பினர்கள் ஆனா லோகதயாளன், தனுஜன் மற்றும் மயூரன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்.
அங்கு காணப்பட்ட பல பிரச்சனைகள் தொடர்பாக முதல்வர் மற்றும் தொலைபேசியில் உரையாடப்பட்டது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. வெள்ளவாய்காலுக்கும் செலுத்தப்படும் அசிட்திரவம் நிறுத்தப்படும், வீதியின் அரைவாசியில் கட்டப்பட்டுள்ள கடை படிக்கட்டுக்கள் உடைக்கப்படும் அதன் மூலம் அவ் வீதியில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுக் கழிவுகளினை ஏற்றுவதற்கு டக்ரர் உள்ளே இலகுவாக செல்வதற்கு வழிசமைக்கப்படும் என்று உறுதியழிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை எதுவும் செய்யப்பட்ட வில்லை. அக அனைத்து செயற்பாடுகளும் சொற்களால் வெறும் உறுதி மொழிகளால் மட்டுமோ காணப்படுகின்றன.
4. யாழ்.பஸ் நிலைய மலசல கூட்டம் தொடர்பானது..
யாழ்.பஸ்நிலையத்தில் புதிதாக மறு சீரமைக்கப்பட்ட மலசலகூடங்கள் காலை 4.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை மட்டுமே பாவனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தூர இடங்களில் இருந்து இரவு நேரங்களில் வருபவர்கள் மிகுந்த சௌகரியங்களை சந்திக்கின்றனர்.
ஏன் அவ்வாறு இரவு நேரங்களில் திறக்கப்படுவதில்லை என்று கேட்டபோது அவர்கள் கூறிய காரணம் யாழ்.மாநர சபை மலசலகூட கழிவுகளை உரிய முறையில் உரிய நேரத்தில் அகற்றுவதற்கு முன்வராமையே என்றும் தாங்கள் கழிவுகளை அகற்றுவதற்கு அதிக கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கின்ற போதிலும் மாநகர சபை அதனை உரிய நேரத்தில் செயற்படுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆக மக்களின் விமர்சனம் யாழ்.மாநகர சபை மீதே திரும்பியுள்ளது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும அத்துடன் இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
5. கடந்த ஜனவரி மாதம் 1470 லீற்றர் டீசல் நிரப்பட்டதற்குரிய சிட்டை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் கணக்காளருக்கு அனுப்பப்ட்டது. அதில் குறித்த எரிபொருள் நிறுவனத்தினர் ஒரு தவறு செய்து விட்டார் 1470 லீற்றர் டீசலுக்குரிய பணத்தினை 1470 ஒ 99 என்று பெருக்கி அதன் தொகையினைப் போடுவதற்கு பதிலாக 147 ஓ 99 என்று பெருக்கி போட்டு விட்டார்கள்.
யாழ்.மாநகர சபையும் குறித்த தொகைக்குரிய காசோலையினை எழுதிகொடுத்து விட்டார்கள். இப்போது குறித்த எரிபொருள் நிலையத்தினர் தாம் கணக்கில் பிழை செய்து விட்டோம் எனவே மிகுதிப் பணத்தினை தருமாறு கடிதம் எழுதியுள்ளனர். இது செயல் பணரீதியில் மாநகர சபைக்கு இழப்பீடு அல்ல.
ஆனால் வருகின்ற சிட்டைகளை சரிபார்க்காமல் அதற்குரிய தொகைளை மட்டுமே கணக்காளர் அலுவலகம் காசோலையா வரைகின்றது என்கின்ற செய்தியை இது வெளிப்படுத்தி நிற்கின்றது இது காணக்காளர் பகுதியின் மிக மிக அலட்சியமாக செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு யாழ்.மாநகர சபை நிர்வாகம் எது கூறப்போகின்றது.
6. 10 மாதம் – 7590 லீற்றர்
11மாதம்– 8648 லீற்றர்
12 மாதம்– 8169 லீற்றர்
01 மாதம்– 9132 லீற்றர்
02 மாதம்– 6230 லீற்றர்
03 மாதம் -6343 லீற்றர்
திடீர் என்று இந்த ஏன் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது 2 ஆம் மாதத்தில் யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகள் மந்த கதியில் நடைபெற்றதா?
7. இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நவீன சந்தை திருத்திற்காக 20 மில்லியன் ரூபா இரண்டு காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டது
1,நவீன சந்தையில் உள்ள மின் இணைப்புக்கள் மீள் சீரமைக்கப்பட்டு அதில் உள்ள அனைத்து கடைகளினதும் மின் மானிகள் ஒரு பொதுவான இடத்திற்கு கொண்டு வருதல்
2,கஸ்தூரியார் வீதியில் உள்ள இரண்டு பாலங்கள் உடைக்கப்பட்டு திரும்பவும் அமைத்தல்
ஆனால் எந்த ஒரு செயற்பாடும் இது வரை முன்னெடுக்கப்பட்டாதாக தெரியவில்லை. ஆக நவீன சந்தை திருத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தினை கொண்டு எச் செயற் பாட்டினை நடைமுறைப்படுத்த போகின்றீர்கள்.

Recommended For You

About the Author: Editor