பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் பூதவுடலுக்கு மோடி அஞ்சலி.

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த மத்திய முன்னாள் அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி (வயது-95) டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் மலர் வளையங்களை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Recommended For You

About the Author: ஈழவன்