ஹட்டனில் களியாட்டம் – நால்வர் கைது

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினை பயன்படுத்தி சிலரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட களியாட்ட நிகழ்வு ஹட்டனில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அங்கு கலால் திணைக்கள அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில், கேரள கஞ்சா, மற்றும் போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை இடம்பெற்ற இந்த விருந்தில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 400 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேரளா கஞ்சா, கொகோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் மண்டபத்தில் வீசப்பட்ட அடையாளம் தெரியாத மருந்து ஆகியவற்றை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஹட்டன், வனாகொட, பிலியந்தல, கண்டி மற்றும் பாணந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 16 முதல் 30 வயதுக்குட்பட்ட 400 இளைஞர்களே இந்த விருந்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பொலிஸார் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்டிகொள்ளப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்