பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேசத்தின் உதவி அவசியம்!!

நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவிகள் அவசியமாகவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஒருசில சர்வதேச நாடுகளினூடாகவே ஏனைய நாடுகளுக்கு பயங்கரவாதம் பரவுவதாகத் தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து சவுதி அரேபியா, கட்டார் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற டிப்ளோமா பட்டமளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் கூறினார்.

மேலும், 30 வருட கால யுத்தத்தை சிலர் மறந்து விட்டனர் எனத் தெரிவித்துள்ள அவர், அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் எண்ணற்றவையாகும் என்பதுடன் அந்த நிலையை மீண்டும் நாட்டில் தோற்றுவிக்க இடமளித்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பாரிய குறைபாடுகளின் மத்தியிலேயே கடந்த 70 வருடங்களாக ஆட்சி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தவகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் தரப்பினரிடமும் குறைபாடுகள் காணப்படுகின்றன எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Recommended For You

About the Author: Editor