விக்ரம் லேண்டர் எந்த நிலையில் இருக்கிறது?

கரம் கொடுத்த தெர்மல் இமேஜ்… விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்! பெங்களூர்: விக்ரம் லேண்டர் நல்ல நிலையில் இருக்கும் என்றும் அதில் உள்ள ரோவருக்கு எந்த சேதமும் ஏற்பட்டிருக்காது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்த ஆர்ப்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் முயற்சி நேற்று அதிகாலை நடந்தது.

அப்போது லேண்டரிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. தரையிறங்குவதற்கு 2.1 கீ.மீ. தூரத்தில் இது போன்ற ஒரு லேசான சறுக்கல் நடந்ததால் விஞ்ஞானிகள் துவண்டு போய் விட்டனர்.

இந்த நிலையில் நிலவை சுற்றி வரும் ஆர்ப்பிட்டர், லேண்டர் கருவி இருக்கும் இடம் குறித்து புகைப்படம் எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

சேதம் சேதம் நிலவில் தரையிறங்கும் இடத்திற்கு 500 மீட்டர் தூரத்தில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக புகைப்படம் காட்சிகள் கூறுகின்றன.

இந்த லேண்டரில் உள்ள ரோவருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்குமா, லேண்டரின் சிக்னலை பெற முடியுமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

கண்டுபிடிக்கப்பட்டது

 

 

கண்டுபிடிக்கப்பட்டது இதுகுறித்து மூத்த விஞ்ஞானி நெல்லை முத்து அளித்த பேட்டியில் கூறுகையில், ஆர்பிட்டர் சுற்றி வரும்போது குற்ப்பிட்ட சூரிய வெளிச்சம் படுகிற இடத்தில் லேண்டரை கண்காணிக்க முடியும் என்பது ஏற்கெனவே சொன்னதுதான்.

லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

உருக்குலைந்து உருக்குலைந்து ஆனால் அந்த லேண்டர் எந்த திசையில் விழுந்துள்ளது என்பது குறித்து கவனித்தாக வேண்டும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள்பட்டு விழும் ஒரு பொருள் பூமியில் விழுவதை காட்டிலும் 6-இல் ஒரு பங்குதான் பாதிக்கப்படும் என கூறியிருந்தேன்.

அந்த வகையில் இந்த விண்கலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது. இது உருக்குலைந்து போவதற்கான வாய்ப்பில்லை.

தூண்டிவிடுவதன் தூண்டிவிடுவதன் இந்த விண்கலம் விழுந்திருக்கும் திசையை கண்டறிந்தால் அங்கு சிக்னல்களை ஊக்குவிக்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். நிலவை ஆர்ப்பிட்டர் சுற்றி வருகிறது.

ஆர்ப்பிட்டரில் இருக்கும் கருவிகளில் உள்ள சிக்னல்கள் லேண்டரில் உள்ள வெவ்வேறு உறுப்புகளில் இருக்கும் என்பதால் ஏதேனும் ஒரு உறுப்பை தூண்டிவிடுவதன் மூலம் சிக்னலை பெற முயற்சிக்கலாம்.

திரவ எரிபொருள் திரவ எரிபொருளில் பொறிகளை ஏற்படுத்தி அந்த லேண்டரை சற்று மேல் எழும்ப வைக்க முயற்சித்து பார்க்கலாம். இந்த லேண்டர் இருக்கும் இடம் பிடிக்கப்பட்டதன் மூலம் 98 சதவீதம் வெற்றி பெற்றுவிட்டோம் என்றே சொல்லலாம் என்றார் முத்து.

திரவ எரிபொருள்

 


Recommended For You

About the Author: Editor