வவுனியாவில் வாள்வெட்டு!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவு பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் 6 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கர் வளவை சேர்ந்த இருதரப்பினருக்கு இடையில் நேற்றுமுன்தினம் சிறு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று (சனிக்கிழமை) இரவு வீடொன்றிற்குள் புகுந்த இளைஞர் குழுவினர், அங்கிருந்தவர்களை வாளால் தாக்கியதுடன், மான்கொம்பினாலும் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதே சம்பவத்தில் காயமடைந்ததாக தெரிவித்து, தாக்குதல் மேற்கொண்ட குழுவினரின் உறவினர்கள் மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor