குளியாபிட்டியில் இரு கடைகளில் தீ விபத்து

குளியாபிட்டிய நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இரண்டு கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குளியாபிட்டிய நகர சபை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவகம் மற்றும் புத்தகக் கடையொன்றிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor