ஒக்டோபர் பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து ஒக்டோபர் 16ஆம் திகதி இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்தியாவின் புதுடில்லி, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலுள்ள விமான நிலையங்களுக்கே பலாலியிலிருந்து விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான பயணிகள் விமான சேவையை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி தெரிவித்தார்.

இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களான அலையன்ஸ் ஏயர் மற்றும் இண்டிகோ ஆகியன யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கான சேவையில் ஈடுபட பேச்சுக்கள் நடத்தியுள்ளன. அத்துடன், பிற பிராந்திய விமான சேவை நிறுவனங்களும் யாழ்ப்பாணத்திலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor