பிரபல இயக்குனர் நடிகருர் ராஜசேகர் திடீர் மரணம்

பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று மரணமடைந்தார், இவரின் இழப்பு சினிமா வட்டாரங்களையும், தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில், ஹீரோக்களில் ஒருவராக நடித்த ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் தோன்றியவர். பிறகு, தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து படங்களை இயக்கினார்.

பாலைவனச் சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உட்பட சில படங்களை இவர்கள் இயக்கினார்கள்.

பிறகு நடிப்பி கவனம் செலுத்திய ராஜசேகர், தொடர்ந்து படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor