ஸ்பானிஷ் ரீமேக் படத்தில் அனுஷ்கா!!

நடிகை அனுஷ்கா பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

இந்த இரண்டு படங்களை அடுத்து ‘பாகிமதி’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே அவர் நடித்துள்ளார்.

தற்போது அனுஷ்கா, தனது எடையை வெகுவாகக் குறைத்துள்ளதோடு, ‘சைலன்ஸ்’ மற்றும் ‘சயிரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதன்பின்னர், ஸ்பானிஷ் மொழியில் வெளியான த்ரில்லர் படமான ‘ஜூலியாஸ் ஐ’ என்ற படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அனுஷ்கா, பெலன் ரூடா நடித்த பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜூலியாஸ் ஐ’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரீமேக் ஆகவிருக்கும் இந்த படத்தை கபீர்லால் இயக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor