பாகிஸ்தான் செல்கிறது பென்டகன் உயர்மட்டக் குழு!!

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பென்டகன் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை அமெரிக்காவின் உதவி பாதுகாப்பு அமைச்சர் ரண்டால் ஷ்ரைவர் (சனிக்கிழமை) அறிவித்தார்.

பாகிஸ்தான் தூதரக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க உதவி பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், “பிராந்தியத்தில் அமைதியின் நோக்கத்தை அடைவதில் பாகிஸ்தான் தலைமையின் ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.

அமெரிக்கா – பாகிஸ்தான் உறவுகளில் வலிமையான தூண்களாகவும் அடித்தளமாகவும் இருப்பது இருதரப்பிலான ஆயுதப்படைகளுக்கு இடையிலான உறவுகள் ஆகும்.

பாகிஸ்தானிய மக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சந்திக்க அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் இஸ்லாமாபாத்துக்கு வருகை தரவுள்ளது” என உதவி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் பேசுகையில், “பாகிஸ்தான்-அமெரிக்க பாதுகாப்புத் துறை உறவுகள் இருதரப்பிலான உறவுகளின் ஒரு அடையாளமாகவே இருந்துள்ளது.

பிராந்திய அமைதிக்கும் நமது பகிர்ந்துகொண்ட பாதுகாப்பு ஆர்வங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு காரணியாக எமது பாதுகாப்பு ஒத்துழைப்பும் கூட்டுறவும் எப்போதுமே இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor