
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு இன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரணமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமது கட்சியின் ஆதரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
கூட்டு எதிரணியுடன் உள்ள சகல கட்சிகளும் கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவித்து, கட்சியின் தேசிய மாநாடுகளை நடத்தி வருகின்றன. அதனடிப்படையிலேயே இந்த கூட்டமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.