
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் பிரமாண்ட வசூலை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில் இப்படம் சீனாவில் இன்று வெளிவந்துள்ளது, முதல் நாள் மாலை நேர காட்சி வரை இப்படம் ரூ 7.2 கோடி வசூல் வந்துள்ளதாம்.
எப்படியும் முதல் நாள் ரூ 8லிருந்து 10 கோடி வரை 2.0 வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், நாளை, நாளை மறுநாள் விடுமுறை என்பதால் கண்டிப்பாக இதன் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.