விமானத்தை விபத்துக்குள்ளாக்க முஸ்லிம் தீவிரவாதி சதி?!

150 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் நாசவேலையில் ஈடுபட்டதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மெக்கானிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மியாமியில் இருந்து பஹாமாஸ் நகருக்கு புறப்பட்ட விமானத்தை விமானிகள் ரன்வேயில் இயக்கத் தொடங்கிய போது அதன் வேகம், செல்லும் இடங்களுக்கு இடையேயான தொலைவு உள்ளிட்ட முக்கியமான விவரங்களை அளிக்கும் தரவுத் தொகுப்பில் பழுது அறிவிப்பு காணப்பட்டது.

இதையடுத்து விமானத்தை மேலெழுப்பும் செயல்முறையை நிறுத்தி விமானிகள் விமானத்தை திருப்பினர். இதனால் 150 பேர் எந்தப் பாதிப்புகளும் இன்றித் தப்பினர். இதையடுத்து விமானத்தை மெக்கானிக்குகள் பரிசோதித்த போது தகவல் தொகுப்பு அமைப்பில் வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிறிய குழாய் ஒன்று பஞ்சுபோன்ற அமைப்புடன் சேர்த்து இயந்திர பாகங்களில் செருகப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விமானத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது மெக்கானிக்கான அப்துல் மஜீத் மரூஃப் என்பவர் சிக்கினார். விசாரணை அதிகாரிகளிடம் தான் தகவல் தொகுப்பு அமைப்பின் வாய்ப் பகுதியில் அடைப்புகளை ஏற்படுத்தியதை ஒப்புக் கொண்ட அவர், ஆனால் விமானத்துக்கோ, பயணிகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மரூஃப் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் விமான நிறுவன நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான ஒப்பந்த விவகாரம் ஒன்றால் அதிருப்தியில் இருந்ததாகவும், கூடுதல் நேரப் பணி மற்றும் கூடுதல் ஊதியத்துக்காக இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் விசாரணை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரூஃப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Recommended For You

About the Author: Editor