எரிந்த நிலையில் மாணவியின் சடலம்!!

சம்மாந்துறை- காரைதீவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பாடசாலை மாணவியொருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நடேஸ்வரராஜன் அக்ஸயா (வயது-17)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளையில் திடீரென தீப்பற்றி சடலமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவத்தை. மாணவியின் சகோதரரே  முதலில் கண்டு, அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்தப்போது வீட்டில் எவரும் இருக்கவில்லையென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சடலாமாக மீட்கப்பட்ட மாணவி, காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor