மூன்றாவது நாளாகத் தொடரும் எழுக தமிழ் பரப்புரை!

எழுக தமிழ்-2019 நிகழ்வு குறித்த பரப்புரை நடவடிக்கை மன்னார் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் மூன்றாவது நாளாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பூநகரி, வலைப்பாடு, கிராஞ்சி, நாச்சிக்குடா, நாவாந்துறை, இரணைமாதா நகர் ஆகிய கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலும், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட மன்னார் நகரம், மாந்தை, பேசாலை, ஓலைத்தொடுவாய் ஆகிய இடங்களிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும், சுவரொட்டிகளை ஒட்டியும், பொது அமைப்புகளை சந்தித்தும் பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பத்திற்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் தன்னார்வமாக முன்வந்து இப்பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
06/09/2019


Recommended For You

About the Author: Editor