ரணிலுக்கு செக்!!

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரினால் 21 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு வழங்குவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியால் இன்று சோதிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த ஆவணங்கள் வெளிவிவகார அமைச்சினால் கூடிய விரைவில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பெரும்பாலும் ரணிலிற்கு சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


Recommended For You

About the Author: Editor