இலஞ்சம் வாங்கும் பொலிஸாா், வேடிக்கை பாா்மக்கள் விசனம்!!

யாழ்.கரையோர கிராமங்களில் வாள்வெட்டு தாக்குதல்களை நடாத்தும் “கெமி” என்ற ரவுடி குழு மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாா் தொடா்ந்தும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னா் பாசையூா், ஈச்சமோட்டை பகுதிகளில் மேற்படி கெமி குழு என்ற ரவுடி கும்பல் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியிருந்தது.

இது தொடா்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் பொலிஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. என மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.

மேலும் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெறும் இளைஞனிடமும் இதுவரையில் பொலிஸாா் வாக்குமூலம் பெறவில்லை. என மக்கள் கூறுகின்றனா்.

கெமி வாள்வெட்டுக் குழுவானது கஞ்சா, ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகிறது எனவும் குறித்த குழுவுடன் பொலிஸாருக்கு தொடர்பு இருப்பதாகவும்

பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த இளைஞனிடம் இதுவரையில் ஏன் வாக்குமூலம் பெறப்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்


Recommended For You

About the Author: Editor