யாழ்.மாநகர சபை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மாநகர மண்டபத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நட்டுவைத்தார்.

யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ளது.

பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் அடிக்கல்லை நட்டுவைத்தனர்.

உள்நாட்டு போர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அழிவடைந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நிரந்தர மண்டபத்தை மீளவும் புதிதாக நிர்மானிப்பதற்கு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதி நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டது.

 


Recommended For You

About the Author: ஈழவன்