6 நாள் குழந்தையை கடத்திய பெண் கைது

பிலிப்பைன்ஸில் இருந்து அமெரிக்காவுக்கு 6 நாள் குழந்தையை பயணப்பொதி ஒன்றினுள் கடத்த முயன்ற அமெரிக்க பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் மீது தற்போது மனித கடத்தல் உட்பட சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் எரின் டால்போட் என்ற பெண் கடந்த 4ஆம் திகதி பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையம் வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவரின் பயணப்பொதியை சோதனையிட்டனர்.

அவரது பயணப்பொதியில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.

குழந்தைக்கு கடவுச்சீட்டு, போர்டிங் பாஸ் அல்லது அரசாங்க அனுமதி எதையும் டால்போட் வைத்திருக்கவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தையுடன் அமெரிக்காவிற்கு செல்ல டெல்டா ஏயார்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க டால்போட் திட்டமிட்டிருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குழந்தையை கண்டுபிடித்த பின்னர், விமான ஊழியர்கள் குடியுரிமை பணியாளர்களை வரவழைத்தனர். அவர்கள் விமான நிலையத்தில் டால்போட்டை கைது செய்தனர். பின்னர் அவர் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது குழந்தை அரசாங்க நலப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்