சந்திரயான் 2 தொடர்பெல்லைக்கப்பால் சென்றது.

சந்திரயான் 2 விண்கலம் திட்டமிட்டப்படி இன்று (சனிக்கிழமை) நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறித்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரயான் 2 விண்கலத்தில் மொத்தமாக மூன்று முக்கிய கலன்கள் இடம் பெற்றிருந்தன. இதில் விக்ரம் லேண்டரானது சுற்றுவட்ட கலனிலிருந்து கடந்த 2ஆம் திகதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

இந்த கலம் இன்று காலையில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலவின் தரைப்பரப்பில் இருந்து 2.01 கிலோமீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிரங்கியதா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சிறந்த முறையில் இயங்குவதால் இந்த திட்டம் தோல்வியை தழுவவில்லை என இஸ்ரோ நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்