சந்திரயான் 2 ஓர் சிறப்பு பார்வை !!

விண்வெளி ஆராய்ச்சி துறையில் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய விஞ்ஞானிகள், இம்முறை உலகின் வேறெந்த நாடுகளும் செய்யாத புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலவு பற்றிய ஆராய்ச்சியில், பல நாடுகள் ஈடுபட்டிருந்தாலும், அதற்கு, விண்கலத்தை அனுப்பி வெற்றி பெற்ற நாடுகள், இந்தியாவையும் சேர்த்து மொத்தம் நான்கு மட்டுமே.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன், இந்தியாவும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனினும், விண்கலத்தை, நிலவின் மேற்பரப்பில் மோதி அதை நிலைநிறுத்தும் சோதனையைத்தான் இந்தியா இதற்கு முன் செய்துள்ளது. இதற்கு பெயர், ‘ஹார்ட் லேண்டிங்’ எனப்படும்.
இந்நிலையில், ‘சாப்ட் லேண்டிங்’ எனப்படும், சுமுகமான முறையில் தரையிறக்கும் தொழிநுட்பம் இம்முறை பயன்படுத்தப்பட உள்ளது. நிலவின் மேற்பரப்பில் எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாமல், மிக கவனமாக, மெல்ல மெல்ல தரையிறக்கம் செய்யும் முறைதான் மிகவும் சவாலானது. இதில் வெற்றி பெற்றால், சாப்ட் லேண்டிங் முறையில், நிலவில் விண்கலத்தை இறக்கிய நாடுகளில் நான்காவதாக இந்தியாவும் இணைந்துவிடும்.
https://www.tamilarul.net/

‘இதற்கு முன்தான் மூன்று நாடுகள் இதில் வெற்றி கண்டுவிட்டனவே. இதில் என்ன அதிசயம் இருக்கிறது?’ என கேட்பவர்களுக்கு இனிமேல்தான் பதில் காத்திருக்கிறது. ஒன்றும் இல்லாமல்தான், அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் நம், சந்திரயான்  2 திட்டத்தை கூர்ந்து கவனிக்கின்றனரா?
சந்திரயானில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம். சந்திரயான் 2 விண்கலம், ஜூலை 22ம் தேதி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம், விண்ணில் ஏவப்பட்டது.
அதில், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் லேண்டர் மற்றும், அதில் ஆய்வு மேற்கொள்ளவுள்ள ரோவர் ஆகியனவும் சேர்த்து விண்ணில் ஏவப்பட்டன. இதில் முதல் அதிசயம் என்னவென்றால் மேற்சொன்ன மூன்றுமே, முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
விண்ணில் ஏவப்பட்டது முதல், குறிப்பிட்ட கால இடைவெளியில், புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, மெல்ல மெல்ல அதன் உயரம் அதிகரிக்கப்பட்டது. அதாவது எடுத்த எடுப்பிலேயே, புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரேயடியாக ராக்கெட்டை செலுத்தினால், காற்று மண்டலத்தில் அது வெடித்து சிதறி சாம்பலாக வாய்ப்புள்ளது.
முதலில், புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்துதல், அதன் பின் 5 கட்டங்களாக, அதன் உயரத்தை அதிகரித்தல். அதாவது, பூமிக்கும், விண்கலத்திற்குமான தொலைவை அதிகரித்தல். இந்த நிகழ்வுகள், வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டன.
https://www.tamilarul.net/
அதன் பிறகு, புவி வட்டப்பாதையிலிருந்து, அதை விலகச்செய்து, நிலவின் வட்டப்பாதையை அடைய செய்வது. இதுவும் அவ்வளவு சுலபம் அல்ல. அதாவது, புவி ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பொருளை, அதற்கு எதிராக விண்ணில் செலுத்தி, அதே ஈர்ப்பு விசையிலிருந்து விலகாமல், வீழ்ந்துவிடாமலும் இருக்க அதற்கான விசையை செலுத்தி, அதை புவி வட்டப்பாதையில் சுற்ற
செய்வது ஒரு சவால்.
அதே சமயம், புவி ஈர்ப்பு விசையிலிருந்து விண்கலத்தை விடுவித்தால்தான் அது, அடுத்த நிலைக்கு சென்று, நிலவின் வட்டப்பாதைக்கு செல்ல முடியும். புவி ஈர்ப்பு விசையிலிருந்து விடுவிக்கும்போது, அது கீழே விழாமல் இருக்க அதற்கான விசை கொடுக்கப்பட வேண்டும்.
அப்போது அது கிட்டத்தட்ட, புவி ஈர்ப்பு விசையிலும் இல்லாமல், நிவின் ஈர்ப்பு விசையிலும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் நிலையில் இருக்கும். அவ்வளவு விசை கொடுத்து அதை அந்தரத்தில் நிறுத்தி, அடுத்ததாக, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் கொண்டு செல்ல வேண்டும்.
புதிதான ஓர் ஈர்ப்பு விசைக்குள் செல்லும் ஓர் பொருள் திடீர் மாற்றங்களுக்கு உள்ளாகலாம், அதையும் கவனித்து, அதன் வட்டப்பாதையில் நிறுத்த வேண்டும். எவ்வாறு, புவி வட்டப்பாதையில் இருந்து மெல்ல மெல்ல  உயர்த்தப்பட்டதோ, அதே போல், நிலவின் வட்டப்பாதையில் அதன் உயரத்தை குறைத்து, மெதுவாக நிலவை நெருங்க வேண்டும்.
குறிப்பிட்ட தூரம் நெருங்கியதும், ஆர்பிட்டர் பிரிந்து, நிலவை வட்டமிட துவங்கும். இத்தனை நிகழ்வுகளும் நடந்தேறிவிட்டன. இனி நடக்கப்போவது, இதை விட சுவாரசியமானது.
இன்று நள்ளிரவுக்கு மேல் அதாவது நாளை காலை கணக்கிற்கு, அதிகாலை 1:30 – 2:30 க்குள், ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியே பிரிந்து, நிலவின் தரைப்பகுதியில் இறங்கும். இதுவரை எந்த நாடுகளும் தரையிறக்காத, நிலவின் தென் துருவத்தில் தான் லேண்டர் தரை இறங்கவுள்ளது.
https://www.tamilarul.net/
அதுவும், கரடு முரடான, மேடு பள்ளங்கள் நிறைந்த நிலவின் தென் பகுதியில் முதல் முறையாக ஓர் ஆய்வு நடைபெறவுள்ளது. இந்த பகுதியில்தான் விண்கற்கள் அதிகம் மோதி, மிக மோசமான நிலையில் நிலவின் மேற்பரப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதிலும், நிலவின் மேற்பரப்பில் மோதி நிற்காமல், பூ போல மெதுவாக சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கம் செய்யப்படவுள்ளது. இதை, இதற்கு முன் எந்த நாடுகளும் செய்தது கிடையாது. அதன் பின், 14 நாட்கள், அந்த ரோவர் நிலவின் தட்ப வெட்ப நிலை, அதில் உள்ள கனிமங்கள், நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்திய கூறுகள், உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறு ஆகியவற்றை ஆராய்ந்து, இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பும். ஆர்பிட்டர், ஓர் ஆண்டு காலம் நிலவை சுற்றி வந்து, அது குறித்த தகவல்களை சேகரித்து அனுப்பும்.
27 கிலோ எடையுள்ள ரோவர், எரிபொருளுடன், 1,471 கிலோ எடையுள்ள லேண்டர், 2,379 கிலோ எடையுள்ள ஆர்பிட்டர் ஆகியவை, வெறும், 1,000 கோடி ரூபாய் பொருட்செலவில் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது, ஓர் ஹாலிவுட் திரைப்படம் எடுக்க ஆகும் தொகையை விட மிகக்குறைவாகும்.
இத்தனை குறைந்த பொருட்செலவில், இவ்வளவு பெரிய ஆய்வை செய்யும் இந்திய விஞ்ஞானிகளை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் வியந்து பார்க்கின்றனர். அதுவும், யாருமே கால் பாதிக்காத நிலவின் தென் துருவத்தில் இந்த ஆய்வு நடத்தப்படுவது ஆச்சரியத்தை அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor