ரணிலின் அதிரடி அறிவிப்பு!!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் அலரிமாளிகையில் நடந்த ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்களின் கூட்டத்தில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் மங்கள சமரவீர மற்றும் சஜித் பிரேமதாச பங்கேற்கவில்லை எனவும் தெரிவிகபடுகின்றது.

கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மற்ற பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றதுடன், அவர்களிடம் பிரதமர் ” யாரும் வேட்பாளராக சண்டையிட தேவை இல்லை என்றும், தானே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் தாம் இதில் வெற்றிபெற்று காட்டுகிறேன் எனவும் ரணில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சஜித்தின் கிளர்ச்சித் தலைவர் மலிக் சமரவிக்ரம மற்றும் அவரது உதவியாளர் UNP தவிசாளர் கபீர் ஹஷிம் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குருணாகலில் தாம் நடத்திய கூட்டத்தில் பெரும்பான்னையானவர்கள் கலந்துகொண்டதாகவும், மக்களின் வேண்டுகோள் சஜித் வேட்பாளராக வரவேண்டும் என்பதே என்றும், அதனால் இது நியாயமற்றது” எனவும் அவர்கள் சஜித்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த பிரதமர் கூட்டத்திற்கு மக்கள் படை வரும் தான், UNP கூட்டத்திற்கு எப்படியும் ஆட்கள் வருவார்கள்.அடுத்த வாரம் தொடங்கி, நான் கூட்டங்களை நடத்துவேன்.

பின்னர் நான் உங்களுக்கு அதிகமானவர்களைக் காண்பிப்பேன் எனகூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாப்பதே முக்கியமாகும் என்றும், ஒருவருக்கு ஒருவர் முகத்தை தூக்கி கட்சியை உடைக்காதீர்கள் எனவும் இது எங்கள் வெற்றிக்கு ஒரு தடை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவை தவிர்க்க முடியாததால் தான் நான் எப்படியும் முன்னிலையாக வேண்டும் எனவும், யாருடனும் போட்டியிட்டு தாம் வெல்வேன் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஹபீர் காசிம் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவருடன், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கடுமையாக தர்க்கப்பட்டார்.

கட்சி ஒரு முடிவை எடுத்தால், அதற்கு கட்டுப்பட வேண்டும், பகிரங்கமாக எப்படி வெளியில் விமர்சிப்பீர்கள் என கிரியெல்ல கூற, இருவருக்குமிடையிலான தர்க்கம் உச்சமடைந்து, ஹபீர் காசிம் வெளியேறினார்.

கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் செயற்பட தவறினால், சபை முதல்வர் பதவியை துறக்கப் போவதாக கிரியெல்லா தெரிவித்தார்.

அவரை சமாதானப்படுத்திய ரணில், கட்சியின் கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்படிவது அனைவரதும் முதன்மையான கடமையென்றார்.

மு.காவின் தலைவர் ஹக்கீம், கோட்டாபயவை சந்திக்க சென்றதையும் சுட்டிக்காட்டி கிரியெல்ல கண்டித்தார்.

அமைச்சர்கள் காமினி ஜெயவிக்ரமா பெரேரா, ஜோன் அமரதுங்கா, ரவி கருணநாயக்க, அகிலா விராஜ் கரியவாசம், சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டார, மற்றும் தயா கமகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor