மட்டக்களப்பு சிறையில் தமிழ் இளைஞரொருவர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

27வயதுடைய வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை நேற்று முன்தினம் வாழைச்சேனையில் இடம்பெற்ற கைகலப்பு ஒன்றிற்காக, வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் நீதிமன்றம் ஊடாக குறித்த இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor