வெளியானது மிகவும் இனிமையான நகரங்களின் பட்டியல்!

உலகின் மிகவும் இனிமையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

The Economist சஞ்சிகையின் Economist Intelligence Unit பிரிவு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமைதியான சூழல், விலைவாசி, பொருளாதாரம், குற்றம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சுற்றுலாப்பயணிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வியன்னா, மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.

அத்துடன், குறித்த பட்டியலில் பரிஸ் 25வது இடத்தினை பிடித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் மிகச்சிறந்த நிலையில் இருந்த பரிஸ் இவ்வருடம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளமைக்கு யெலோ வெஸ்ட் போராட்டமே பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor