பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபாய் 50 சதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை முகவரிடம் உத்தியோபூர்வமாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு தொடர்பில் நாம் இலங்கையில் உள்ள பிரிமா நிறுவனத்திடம் வினவிய போது, இப்போதைய சூழ்நிலையில் பிரிமா கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் கட்டாயத்தில் தாம் இருப்பதாக தெரிவித்தனர்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதி பெறாமல் இவ்விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor