உடல்பருமன் யாருக்கு ஏற்படும்?

உடல் எடையை குறைக்க வேண்டுமா விரும்புபவர்கள், கெட்ட கொழுப்பை மட்டுமே குறைக்க வேண்டும். கொழுப்புச் சத்து அறவே நீக்கப்பட்ட டயட் முறைகளை கடைப்பிடிக்கக் கூடாது.

பாடி மாஸ் அனலைசர் (Body Mass Analyzer) மூலம் ஒருவருடைய எடை, உயரம், அவரது எலும்பின் அளவைப் பொறுத்து, எவ்வளவு சதை இருக்கவேண்டும், எவ்வளவு கொழுப்புச் சத்து இருக்கவேண்டும் என்பதை அறிய முடியும்.

உயரத்துக்கு ஏற்ற எடை என்பதைவிட, நல்ல தசைப்பகுதி, அளவான கொழுப்புச்சத்து, ஆரோக்கியமான எலும்புகள்கொண்ட உடல் இருக்க வேண்டும்.

உடல்பருமன் யாருக்கு ஏற்படும்?

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி பழக்கம் இல்லாதவர்கள்.

அதிக அளவு நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்கள்.

மூன்று வேளையும்  அதிக அளவு கார்போஹைட்ரேட்(அரிசி வகை உணவுகள்) உணவுகளைச் சாப்பிடுபவர்கள்.

மன அழுத்தம் உள்ளவர்கள்.

தைராய்டு, பி.சி.ஓ.டி பிரச்னை உள்ளவர்கள்.

தினமும் எவ்வளவு  கலோரி தேவை ?

தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு  2,500 கலோரிகள்.

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களுக்கு 2,000 கலோரிகள்.

எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு 1,500 கலோரிகள்.

எந்தெந்த வயதில் உடல் எடை கூடும்?

குழந்தைப்  பருவத்தில் அளவுக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதாலும், குழந்தைகளை ஓடியாடி விளையாடவிடாமல், தடுப்பதாலும் இளம் பருவத்திலேயே உடல்பருமன் ஏற்படுகிறது.
பெண்களுக்கு, திருமணம் ஆகும் வரை மட்டும், `உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால் போதும்’ என்ற மனநிலை உள்ளது.  திருமணத்துக்குப் பின்னர், ஹார்மோன்கள் காரணமாக எடை கூடுவதைக் காட்டிலும், தவறான உணவு முறை மற்றும் வாழ்வியல் முறை காரணமாகவே அதிக எடை கூடுகிறது.


Recommended For You

About the Author: Editor