திருமலையில் நீர்காகம் கூட்டுப்படை பயிற்சி!!

நீர்காகம் கூட்டுப்படை பயிற்சியில் முதல் கட்டமான மீட்பு நடவடிக்கைகள் திருகோணமலையிலுள்ள அஸ்ரப் துறைமுகத்தில் நடைபெற்றது.

7 பெண், 15 ஆண் பயணக் கைதிகளை மீட்கும் பணிகள் இராணுவம் கடற்படையினரது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

212 விமானப் படையின் ஹெலிகொப்டர்களை பயண்படுத்தி இராணுவ கொமாண்டோ, விஷேட படையணி, இராணுவ புலனாய்வு படையணி மற்றும் கடற்படை விஷேட கடற்படைப் பிரிவினர்கள் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த கூட்டுப் பயிற்சிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியும் கூட்டுப் படைப் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே தலைமையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.


Recommended For You

About the Author: Editor