இரண்டு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்!

அக்குரெஸ்ஸ, பனத்துகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor