இலங்கையில் அதிசயம்!

பெரும்பாலான உலோகப் பொருட்களும், கற்களும் நீரில் அமிளும் என அறிந்துள்ளோம். ஆனால் இலங்கையில் மிதக்கும் அதிசய கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, மீகஹகிவுல – தல்தென ஶ்ரீ போதிராஜாராம விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பதுலு ஓயாவில் சுமார் இரண்டு கிலோகிராம் நிறையுடைய இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லானது மீகஹகிவுல – தல்தென ஶ்ரீ போதிராஜாராம விகாரை அருகிலுள்ள குட்டையில் போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விசித்திர கல்லை பார்ப்பதற்காக இன்று காலை முதல் பெருந்திரளான மக்கள் விகாரையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

மேலும் இந்த கல் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கான முழு ஒத்துழைப்பையம் வழங்க தயார் என தல்தென ஶ்ரீ போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி வண. தல்தென தம்மவங்ச தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor