லொஸ்சியாவுக்கு பச்சோந்தி விருது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதமும், போட்டியும் எழுந்துள்ளது.

தனிப்பட்ட முறையிலான தாக்குதல், மறைமுக தாக்குதல், உணர்ச்சிவசப்பட வைத்தல், கோபப்பட வைத்தல் ஆகிய தந்திரங்கள் போட்டியாளர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் சாக்சி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கின்றனர். முதல்கட்டமாக பச்சோந்தி விருது அளிக்கப்படுகிறது.

பச்சோந்தியை போல் போலியானவர் என்பதால் லொஸ்லியாவுக்கு அந்த விருது வழங்கப்படுவதாக மோகன் வைத்யா அறிவிக்க சாக்சி அந்த விருதினை லொஸ்லியாவுக்கு கொடுக்கின்றார்.

சாக்சியிடம் இருந்து பச்சோந்தி விருதை பெற்ற லொஸ்லியா, ‘இந்த விருது தனக்கு வேண்டாம்’ என்று தூக்கி எறிந்தார்.

’உனக்கு இந்த விருது வேண்டாம் என்றால் வெளியே போய் தூக்கி போடு, இங்கே போடக்கூடாது’ என்று மோகன் வைத்யா கூற, மதிப்பில்லை என்றால் நான் யாருக்கும் விருது கொடுக்க மாட்டேன் என்று கோபமாக சாக்சி கிளம்பினார்.


Recommended For You

About the Author: ஈழவன்