கல்முனை ஹோட்டலில் பழுதடைந்த கோழி இறைச்சி கறி!!

கல்முனையில் உள்ள பிரபல உணவகத்தில் பழுதடைந்த கோழி இறைச்சியை வாடிக்கையாளர் ஒருவருக்கு சாப்பிட கொடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அதில் ஏற்பட்ட துர்நாற்றத்தை வைத்து இறைச்சி பழுதடைந்திருப்பதை கண்டு குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். எனினும், உரிமையாளர் தெளிவான பதில் எதுவும் வழங்காமல் சென்றுவிட்டார்.

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் குறித்த சம்பவத்தினை காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஒருவரது உடலும், மனமும் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் இன்று உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட கூட அச்சப்படும் சூழல் உருவாகி கொண்டிருக்கின்றது. எல்லாமே வியாபாரமாகி கொண்டிருக்கின்றது.

இதேவேளை, இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பது சமூகவாசிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்


Recommended For You

About the Author: Editor