கோண்டாவிலில் ரவுடிக்கும்பலால் வீடுடைப்பு

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த வீட்டிற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே வன்முறையில் ஈடுபட்டது. குறித்த நால்வரும் தமது முகங்களை மூடி கட்டி இருந்தார்கள் என வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
வீட்டினுள் புகுந்து வன்முறை கும்பல் அடவாடியில் ஈடுபட்டிருந்த வேளை வீட்டில் இருந்தவர்கள் அவல குரல் எழுப்பிய போது அவர்களை வாளினை காட்டி மிரட்டியதாகவும் , அவல குரல் கேட்டு உதவிக்கு வந்த அயலவர்களையும் வாள்களை காட்டி மிரட்டி விட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: ஈழவன்