வெலிகந்தயில் சடலம் கண்டெடுப்பு!

வெலிகந்த பொலிஸ் பிரிவிலுள்ள தேசிய பண்ணை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணையிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பண்ணைக்கு பொறுப்பாளராகக் கடமையாற்றியவரின் சடலமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலைப் பகுதியைச் சேர்ந்த டி.எம். தர்மரெத்தின (வயது 48) என்பவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பண்ணைப் பொறுப்பாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் காணப்பட்டதை அவதானித்தவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

பண்ணையைப் பராமரிப்பதற்கென அனுமதி பெற்ற துப்பாக்கி, குறித்த பண்ணை பொறுப்பாளரிடம் இருந்ததாக தெரிவித்த பொலிஸார், எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாமென்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


Recommended For You

About the Author: Editor