சீனாவில் அறுவடைத் திருவிழா ஆரம்பம்!!

இந்த ஆண்டுக்கான சீன விவசாயிகளின் அறுவடைத் திருவிழாக் கொண்டாட்டம் ஆரம்பமாகவுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள கொண்டாட்டத்தினை முன்னிட்டு, விழாக் கொண்டாட்டம், பண்பாட்டு வளர்ச்சி, கிராமங்களின் புத்துயிர் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையை வெளிக்காட்டும் வகையில், சீனாவின் பல பகுதிகளில் பல்வகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து, சீன விவசாய மற்றும் கிராமப்புற விவகாரத் துறை அமைச்சகத்தின் சந்தை மற்றும் பொருளாதார தகவல் பிரிவின் தலைவர் டாங்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த போது, ”தற்போது, இணையச் சேவை குறிப்பாக நகரும் இணையச் சேவை எங்கும் காணப்படுகின்றது.

இணையச் சேவை, பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு போன்ற தகவல் தொழில்நுட்பங்களால், விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்;டு விழாக் கொண்டாட்டங்களில், 5G, ஆளில்லா பறக்கும் கருவி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும்” என குறிப்பட்டார்.

விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக, சீன விவசாயிகளின் அறுவடைத் திருவிழாவைக் கடைப்பிடிக்க, சீனா 2018ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அதன்படி, ஆண்டுதோறும் சீன நாட்காட்டியின் ‘ச்சியுஃபென்’ என்ற தினத்தில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor