குப்பைகளை திருப்பி அனுப்பியது இந்தோனேஷியா!

இந்தோனேஷியாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அனுப்பப்பட்டிருந்த சுமார் 250க்கும் மேற்பட்ட குப்பை நிரப்பப்பட்ட கொள்கலன்கள்(கன்டெய்னர்கள்)  அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இவை அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், ஹொங்கொங், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்ததாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேஷியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட இந்த கொள்கலன்களில் நச்சுத்தன்மை மிக்க, அபாயகரமான பொருள்கள் இருக்கக்கூடும் என்பதால் அவை திருப்பி அனுப்பப்பட்டதாக குறித்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தோனேஷியாவுக்கு வந்த 1,000க்கும் மேற்பட்ட குப்பை கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

அண்மையில் பிரித்தானியாவில் இருந்து  கொழும்பிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 98 கொல்களன்களில் கழிவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை கொழும்பு அரசியலிலும் அண்மையில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor